சித்த மருத்துவத்தின் தாது சீவ மருந்துகளையும், அதனை இனங்கண்டறிதலில் புவியியலாளர்களுடன் இணைந்து தன் இறுதி மூச்சு வரைப் பணியாற்றிய, சித்த மருத்துவர். பேரா. சொர்ணமாரியம்மாள் அவர்கள் 3-10-2021 அன்று இறைவனடி சேர்ந்தார். 

சித்த மருத்துவத்தின் தாது ஜீவ அரிச்சுவடியான டாக்டர். டி. தியாகராஜன் அவர்களின் கனவை தன் குறிக்கோளாக கொண்டு  குணபாடம் தாது ஜீவ வகுப்பு எனும் நூலை மேம்படுத்தி அதில் ஜீவ வகுப்பு நூலை வெளியிட்டு வெற்றி கண்டவர்.

மகளிரின் சரீர லட்சனம் கொண்டு நோய்க்கணிப்பும் நோய்க்கான மருந்துகளையும் குறித்த தகவல்களை தொகுத்து வைத்திருந்த போதிலும் தன் குருவின் கனவை மெய்ப்பித்த பிறகே மற்ற நூல்களை வெளியிட வேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட்டவர்.

சித்த மருத்துவத்தின் தனி ஒரு ஆளுமையாக இருந்து களப்பணியில் ஈடுபட்டு தாது ஜீவ புத்தகத்தில் உள்ள சரக்குகள் மட்டுமன்றி கருடக்கல், குதிரைப்பல்பாடாணம் முதலிய பல தாது பொருட்களை அடையாளம் காணவும் அவற்றிலுள்ள  கலப்படங்களை களைத்தெறியும் கலையையும் கற்று அதை மற்றவர்களுக்கும்  விளக்கி தாது ஜீவத்தின் புதிய பரிமாணத்தை வெளிக்கொணர்ந்தவர். போகர் 7000 என்னும் நூலில் ஆதி அந்தத்தை தன் அறிவால் ஆராய்ந்து அறிந்தவர்.

தன்‌‌ மாணவர்களுக்கு மருத்துவ அறிவை போத்தித்ததோடு அடுத்த தலைமுறைக்கும் அதை கடத்தும் நோக்கில் "அகபுற மருந்துகளின் இலக்கணமும் செய்முறையும்", "குணபாடம் - ஜீவம்", "போகர் ஏழாயிரத்தில் சித்தமருத்துவ கனிமங்கள்", "சித்த மருந்தாக்கியல் விதிகளும் செய்முறைகளும்" போன்ற பல  நூல்களை இயற்றியுள்ளார். அந்த வரிசையில் இவர் இயற்றிய சித்த மருந்தாக்கியல் விதிகளும் செய்முறைகளும் எனும் நூலில் வைப்பு முறைகள் பற்றியும் பழங்கால அளவுக்கான மெட்ரிக் அளவுகள் பற்றியும் விளக்கியுள்ளார். அதிலும் இவரது பெருங்காய வைப்பு முறை, நவாச்சார வைப்பு தனிச் சிறப்புடையது.

கர்ப்பம் தரித்த ஒன்பது மாதங்களும் பயன்படுத்த வேண்டிய சித்த மருந்துகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டவர்.

தாது ஜீவம் பற்றிய களப்பணிகள், மகளிர் மருத்துவம், மருந்தாக்கியல் மற்றும் ஆராய்ச்சி என அவர் தடம் பதிக்காத பிரிவுகளே இல்லை. சித்த மருத்துவத்தில் தனக்கென அவர் பல மைல்கல்லை உருவாக்கியவர் வேறறொருவர் அத்தொலைவினை கடந்து வர தன் வாழ்வையே சித்த மருத்துவத்திற்காக் அர்பணித்தால் மட்டுமே  சாத்தியம். தாது ஜீவம் பற்றிய களப்பணிகள், மகளிர் மருத்துவம், மருந்தாக்கியல் மற்றும் ஆராய்ச்சி என அவர் தடம் பதிக்காத பிரிவுகளே இல்லை.

இவரது இழப்பு சித்த மருத்துவத்திற்கு பேரிழப்பாகும்.