Dr.CP. மேத்யூ MBBS, MS, DMR (Senior Oncologist) கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் 1929 ஆம் ஆண்டு பிறந்தார். தனது MBBS மற்றும்  கதிரியக்க சிகிட்சை படிப்புகளை மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் படித்து முடித்தார். இவர்தான் இந்தியாவில் முதல்முறையாக பிரேக்கிதெரபி என்ற புற்றுநோய் சிகிட்சை முறையை அறிமுகம் செய்தார். கருப்பை கழுத்து புற்றுநோய்க்காக முதல் மருந்து ஆராய்ச்சியை இந்தியாவில் செய்து அதை அறிவியல் இதழில் வெளியிட்டார். இப்படி, புற்றுநோய்க்கான எந்த புது உக்தி உலகில் வந்தாலும், அதை இந்தியாவில் முதல் முதலாக அறிமுகம் செய்தவதில் முன்னோடியாக இருந்தார். அவரின் நோக்கமே எப்படியாவது தன்னை நாடிவரும் புற்றுநோயாளிகளுக்கு உதவிசெய்வதுதான். இப்படி ஆராய்ச்சி மனப்பான்மை மற்றும் நவீன கண்ணோட்டத்துடன் செய்லபட்டு வந்த அவர், கோட்டயம் மருத்துவ கல்லூரி புற்றுநோய் துறையின் பேராசிரியராக இருந்தபோது, தன்னால் கைவிடப்பட்ட ஒரு புற்றுநோயாளி ஒருவர் சித்தா மருந்துண்டு, குணமானதை பார்த்த பின்பு, சித்த மருத்துவம் குறித்த தேடுதலை ஆரம்பித்தார். அதன் தேடுதலாக, தமிழ்நாட்டிலுள்ள பல சித்த வைத்தியர்களை நேரில் வந்து பார்த்து, விவரங்களை அறிந்து கொண்டு, அதன்பின் அவரிடம் வந்த புற்றுநோயாளிகளுக்கு சித்தா மருந்துகளும் சேர்த்தே கொடுத்துள்ளார்.  60 ஆண்டு கால புற்றுநோய் சிகிட்சையின் பாதியில் இந்த திருப்பம் ஏற்பட்டதன் விளைவாக, கடந்த 34 ஆண்டுகளாக சித்தா-நவீன புற்று நோய் கூட்டு சிகிட்சையை இவர் மேற்கொண்டு வந்திருந்தார். அவர் கோட்டயம் மருத்துவ கல்லூரியில் துணைமுதல்வராகவும் இருந்து ஓய்வுபெற்றார். அவர் எங்கு பேசினாலும், சித்தாவை முதன்மைபடுத்தி பேசுவார். கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே ஒரு மலைதானே இருக்கிறது, சித்த மருத்துவம் கேரள மண்ணில் பரவுவதற்கு எது தடையாக இருக்கிறது என்ற கேள்வியை அவர் அவ்வப்போது எழுப்புவார். அவர் பல சித்த மருத்துவர்களுக்கு தனது ஒருங்கிணைந்த சிகிட்சைமுறையை பற்றி கற்றுக்கொடுத்திருக்கிறார். அவருக்கு, தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர், Dr.மீனாகுமாரி அவர்கள், வாழ்நாள் சாதனையாளர் விருதை அவரது 92 வது பிறந்த நாளன்று (7-9-2021) அவரது இல்லத்துக்கே சென்று வழங்கினார்.

இவர் தனது 92 வது வயதை பூர்த்திசெய்த பின்னர், 19/10/2021 ல் இயற்கை எய்தினார். இது நாள் வரையிலும் சித்த மருத்துவத்துக்காக கேரளாவில் ஒலித்துகொண்டிருந்த அந்த குரல் ஓய்ந்தது. 

Newspaper: https://news8plus.com/dr-c-p-mathew-passes-away-allopathic-doctor-who-combined-siddha-ayurveda-and-homeopathy/ 

Newspaper - https://www.organiser.org/india-news/kerala-s-first-cancer-specialist-dr-c-p-mathew-passed-away-at-the-age-of-92-6615.html